முக்கிய செய்திகள்

பார் சாரி – விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
Sakshi-Agarwal 2021 10 31

Source: provided

சக்திவேல் இயக்கத்தில் என்.செந்தில் பிரபு, சக்திவேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ஃபார் சாரி. ஆந்தாலஜி பாணியில் உருவாகியுள்ள இ்ந்தப் படத்தில் ஜான் விஜய், காளி வெங்கட், ரித்விகா, சாக்ஷி அகர்வால்  உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் நான்கு தனித்தனி கதைகள் இடம் பெற்றுள்ளன. நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஒருவர் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் படத்துக்கு ‘4 சாரி’ என பெயரிடப்பட்டுள்ளது. அவ்வாறு  ‘சாரி’ சொல்லும்போது ஒருவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். படத்துக்கு வெங்கடேஷ் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய  பிரசன்னா சிவராமன் இசை அமைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து