எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்ட 3 மணி நேரத்திலேயே 5,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இருவழிப்பாதையை திறக்க தேவசம் போர்ட் முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 15-ம் தேதி நடை திறக்கப்பட்டு மறுநாள் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பக்தர்கள் தினமும் 30,000 பேரை தரிசனத்திற்கு அனுமதிக்க தேவஸ்தானம் நிர்வாகம் முடிவு செய்த நிலையில், மழை காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்தனர்.
தற்போது மழை குறைந்திருப்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். காலையில் நடை திறக்கப்பட்ட 3 மணி நேரத்திலேயே சுமார் 5,000 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் கடந்த 6 நாட்களில் சபரிமலையில் அரவண பாயாசம், அப்பம் ஆகியவை மட்டுமே 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பாச்சிமேடு, நீலிமலை வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்ட் முடிவு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |