முக்கிய செய்திகள்

காயம் காரணமாக நியூசி.க்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      விளையாட்டு
KL-Rahul 2021 11 23

Source: provided

மும்பை : காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

கான்பூரில்...

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 3-0 என அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. இந்த டெஸ்டில் இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

காயம் காரணமாக...

டி20 தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி அசத்திய கே.எல். ராகுல் டெஸ்ட் போட்டியிலும் அசத்த காத்திருந்தார். ஆனால், தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கான்பூர் டெஸ்டில் பங்கேற்கமாட்டார் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்கள் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து