முக்கிய செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல்: பா.ஜ.க எம்.பி. கவுதம் காம்பீர் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      இந்தியா
Gautam-Gambhir 2021 11 24

ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளதால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க எம்.பி.யுமான கவுதம் காம்பீர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி மத்திய மாவட்ட போலீஸ் கமிஷனர் கூறுகையில், "கவுதம் காம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து இ மெயில் வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது. அதனால், அவர் வீட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

 

கவுதம் காம்பீர் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பாக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவ்வப்போது பரபரப்பான அரசியல் கருத்துகளை வெளியிடுவது அவரது வழக்கம். சில நேரங்களில் அது சர்ச்சையாகிவிடுவதும் உண்டு. இந்நிலையில், அவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து