முக்கிய செய்திகள்

ரெய்னா இடம்பெறுவது கேள்விக்குறி: சி.எஸ்.கே.வில் டோனி உள்ளிட்ட 4 வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      விளையாட்டு
Dhoni--2021-11-24

சி.எஸ்.கே.வில் டோனி உள்ளிட்ட 4 வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ரெய்னா மீண்டும் இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

எதிர்பார்ப்பு... 

எதிர்வரும் 2022 ஐ.பி.எல் ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஐ.பி.எல் ஃப்ரான்சைஸ் அணிகள் எந்த வீரர்களை தக்க வைக்க உள்ளது, யாரை விடுவிக்க உள்ளது என்பது சஸ்பென்சாக உள்ளது. இந்த நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

வாய்ப்புகள்... 

இந்த நிலையில், அது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐ.பி.எல் 2022 சீசனில் சென்னை அணி நிர்வாகம் தக்கவைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோனிதான் சென்னை அணியின் முதல் சாய்ஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4 வீரர்களுக்கு...

அதே போல சென்னை அணியில் இடம் பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. டோனி உடன் ருதுராஜ், டூப்ளசிஸ் மற்றும் ஜடேஜா எதிர்வரும் சீசனில் விளையாட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து