முக்கிய செய்திகள்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வரும் 1-ம் தேதி நடைபெறுகிறது : ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவிப்பு

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      தமிழகம்
EPS-OPS 2021 07 23

Source: provided

சென்னை : அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் வரும் 1-ம் தேதி சென்னை , ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு வருமாறு.,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 01.12.2021 - புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும்.

கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து