முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 3 மாதத்திற்கு பின் பயங்கர பிரளயம் ஏற்படும் : திண்டுக்கல் பெண் சாமியார் அதிரடி பேட்டி

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருவண்ணாமலை : தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும் என்று திண்டுக்கல் பெண் சாமியார் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா. இவர் காளிமாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டம் பெற்றவர்.  இவர் திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். முகத்தில் சாயம் பூசி உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு நிறைய தங்க நகைகளை அணிந்து இருந்தார். சொகுசு காரில் வந்தார். தலைமுடியிலும் சாயம் அடித்திருந்தார். 

திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகில் உள்ள காளி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார். முன்னதாக அவர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்கும திலகமிட்டு ஆசி வழங்கினார்.  சிறுவயதில் காளிமாதா மீது எனக்கு பக்தி ஏற்பட்டது. அதுமுதல் காளிமாதா வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இரவில் மயானம் சென்றும் வழிபாடு செய்வேன்.  உலகில் அதர்மம் தலைதூக்கும்போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார். உண்ணாமலை அம்மன் போல் காளியும் சிவனுக்கு மிகவும் விருப்பமானவள். அண்ணாமலையார் உத்தரவின்பேரில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்று வந்துள்ளேன்.

உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும். 3 நாட்கள் முழு கடையடைப்பு நடக்கும். பின்னர் அமைதியான சூழ்நிலை உருவாகும்.  விரைவில் திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!