முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே தக்கவைக்கவிருக்கும் 4 வீரர்கள் பட்டியலில் டோனியின் பெயரை குறிப்பிடாத காம்பீர் !

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

அடுத்த ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கும் 4 வீரர்களில் பட்டியலில் டோனியின் பெயரை வேண்டுமென்றே குறிப்பிடாமல் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கவுதம் காம்பீர்.

அடுத்த மாதம்...

ஐ.பி.எல். 2022-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும். எந்த அணி யாரை தக்க வைத்து கொண்டது என்பது குறித்து இன்று இரவு 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.

ரூ.90 கோடி வரை...

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக வீரர்களின் ஏலத்தில் 90 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முடியும். ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்து கொண்டால், அவர்களின் 90 கோடி ரூபாய் கணக்கிலிருந்து 42 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும். அதுவே 3 வீரர்கள் என்றால் ரூ. 33 கோடி, 2 வீரர்கள் என்றால் ரூ.24 கோடி அல்லது ஒரு வீரர் மற்றும் தக்க வைத்து கொண்டது என்றால் ரூ.14 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

டோனி தவிர்த்து...

டெல்லி எம்.பி.யாக இருக்கும் காம்பீர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சென்னை அணி எந்த 4 வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இளம்வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், ஆல் ரவுண்டர் ஜடேஜா, டுபிளஸிஸ், சாம் கரண் ஆகிய 4 வீரர்களை மட்டும் தான் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றும் மற்றவர்களை ஏலத்தில் தேர்வு செய்து கொள்ளலாம் என்று காம்பீர் கூறினார்.

தக்க வைப்போம்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் டோனியின் பெயரை காம்பீர் குறிப்பிடவில்லை. டோனியின் பார்ம் சற்று பாதிக்கப்பட்டு இருந்தாலும், அணியை வழிநடத்தி முக்கிய போட்டிகளில் ரன் குவித்துவிடுவார். சென்னை அணி நிர்வாகமே டோனியை தான் தாங்கள் முதல் வீரராக தக்க வைப்போம் என்று கூறிய பிறகும் காம்பீர் வேண்டும் என்றே, அவர் பெயரை குறிப்பிடாமல் விட்டுள்ளார்.

குற்றச்சாட்டு...

டோனியை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தான் அவரை காம்பீர் தேர்வு செய்யவில்லை என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன் என்ற முறையில் யாராவது பாராட்டினால், நானும் தான் ரன் அடித்தேன் என்று வெளிப்படையாக கேட்கும் அளவிற்கு காம்பீர் டோனி மீது பொறாமை கொண்டவர் என ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து