முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக் குழுவை மேலும் விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

சென்னையில் பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்குழுவை விரிவுபடுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த குழுவில் கூடுதல் உறுப்பினர்களை சேர்த்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த குழுவில், டெல்லி நகர் மற்றும் ஊரமைப்பு நிறுவன தலைமை திட்ட அலுவலர், காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குநர் நம்பி அப்பாதுரை, சென்னை வளர்ச்சி கல்வி நிறுவனப் பேராசிரியர் ஜானகிராமன், மும்பை ஐஐடிகட்டுமானப் பொறியியல் துறை பேராசிரியர் கபில் குப்தா உள்ளிட்ட பல வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர். 12 பேர் குழுவில் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பேர் இணைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து