முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      தமிழகம்
EPS 2023 03 27

சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணத்தைத் தொடங்குகிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கான லோகோ மற்றும் பாடலை நேற்று வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய இபிஎஸ், நான் மக்களைச் சந்திக்கவில்லை என்று முதல்வர் கூறுகிறார். நான் எப்போதும் மக்களுடன் இருப்பவன். மக்களோடுதான் பயணிக்கிறேன். எனது சுற்றுப்பயணம் மூலம் அ.தி.மு.க. மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த பயணத்திற்கு மிகப்பெரிய நோக்கம் இருக்கிறது. திமுக ஆட்சியின் கொடுமைகளை மக்களிடம் எடுத்துரைத்து மாற்றத்திற்கான நம்பிக்கையை விதைப்பது. திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் என்பதே இந்த பயணத்தின் நோக்கம்.

'2026 பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி, அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும். இபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்' என்று அமித் ஷா சென்னை வந்தபோது செய்தியாளர்கள் மத்தியில் தெளிவாகக் கூறிவிட்டார். அதனால் அதில் எந்த மாற்றமுமில்லை. கூட்டணியில் உள்ளவர்களை தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து