முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்னா குறித்து அவதூறு பேச்சு: நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 11 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவாலை தரக்குறைவான வகையில் விமர்சித்த நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

பஞ்சாப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் கடந்த 5-ஆம் தேதி சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசை பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர்.

இது தொடர்பாக, பாஜக உறுப்பினரும் பாட்மின்டன் வீராங்கனையுமான சாய்னா நெவால் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால், நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே இருக்கும். பிரதமர் மோடிக்கு எதிரான அராஜகவாதிகளின் செயல்பாட்டைக் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தெரிவித்த சாய்னாவை ‘நாட்டின் பாதுகாவலர்’ என ட்விட்டரில் விமர்சித்த நடிகர் சித்தார்த், இரட்டைப் பொருள் கொள்ளும் வகையிலான சொற்களையும் பயன்படுத்தியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாய்னாவின் கணவரும் பாட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப் உள்ளிட்ட பலர் நடிகர் சித்தார்த்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த சாய்னா, ‘‘ஒரு நடிகராக சித்தார்த்தை பிடிக்கும். ஆனால், இதுபோன்ற கருத்துகள் நல்லதல்ல. அவர் எதைக் குறிப்பிட்டு அவ்வாறு தெரிவித்தார் எனத் தெரியவில்லை. ஆனால், இன்னும் சிறந்த சொற்களை அவர் பயன்படுத்தியிருக்கலாம்’’ என்றார்.

நடிகர் சித்தார்த்தின் பதிவுக்குக் கண்டனம் தெரிவித்த தேசிய மகளிர் ஆணையம், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிர காவல் துறைத் தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) கடிதம் எழுதியுள்ளது. மேலும், நடிகர் சித்தார்த்தின் கணக்கை நீக்குமாறும் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரியை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த நடிகர் சித்தார்த், மரியாதைக் குறைவாக எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், தனது கருத்தை மாற்று அர்த்தத்தில் புரிந்து கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து