முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை: தமிழகத்தில் காணும் பொங்கலை வீட்டில் கொண்டாடிய மக்கள்!

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் என்ற பெயரில், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் வீடு மற்றும் விவசாய தோட்டங்களில் காணும் பொங்கலை கொண்டாடடினர். 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக மூன்றாவதுநாள் காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் நேற்று காணும் பொங்கல் கொண்டாட்டம் இல்லை என தெரிவிக்கப் பட்டிருந்தது.  தடையை மீறி பொது இடங்களில், காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க, மாநிலம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 

கடற்கரை, பூங்கா மற்றும் பண்ணை வீடுகள் அதிகம் உள்ள இடங்கள், சுற்றுலா தலங்கள் இருக்கும் பகுதிகளில், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில், 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொது மக்கள் வீடு மற்றும் விவசாய தோட்டங்களில் காணும் பொங்கலை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து