எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா, காலநிலை, மோதல் காரணமாக உலகம் தற்போது மோசமாக உள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலாளராக தனது 2-வது பதவி காலத்தை தொடங்கியுள்ள ஆன்டனியோ குட்டரெஸ், 2022-ம் ஆண்டுக்கான முன்னுரிமைகள் குறித்து ஐ.நா. பொதுச்சபையில் நேற்று உரையாற்றினார். இதுதொடர்பாக அவர் தனியார் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இல்லை. என்னால் சமாதானம் செய்ய முடியும். நான் மத்தியஸ்தம் செய்ய முடியும், ஆனால் எனக்கு அதிகாரம் இல்லை. மோதல்களை தடுக்கவும், உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கவும், கொரோனா நெருக்கடி மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை சமாளிக்கும் முயற்சியில் எனது முதல் பதவிக் காலத்தில் என்னுடைய முன்னுரிமைகள் மாறவில்லை.
கொரோனா தொற்றுநோய், காலநிலைமாற்ற நெருக்கடி மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவற்றால் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது உலகம் பல வழிகளில் மோசமாக உள்ளது என்று ஆன்டனியோ குட்டரெஸ் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |