முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 1-ம் தேதி முதல் திருப்பதியில் அங்கபிரதட்சணம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

புதன்கிழமை, 23 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

வரும் 1-ம் தேதி முதல் திருப்பதியில் அங்கபிரதட்சணம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம் அஷ்டதள பாத பத்ம ஆராதனை, கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்காக தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கடந்த 20-ந்தேதி முதல் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும். இதற்காக ஒரு நாள் முன்னதாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் பதிவு செய்தால் மின்னணு குலுக்கல் முறையில் பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும்.

இதேபோல் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அங்கபிரதட்சணம் செய்து வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிஏசி 1-ல் பக்தர்களுக்கு அங்கபிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. கடந்த 2020 மார்ச் 20-ம் தேதி முதல் ஆர்ஜித சேவைகள் மற்றும் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கபடுவது நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது 2 ஆண்டுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். முந்தைய நாள் அங்கபிரதட்சணம் டிக்கெட் பெறும் பக்தர்கள் மறுநாள் அதிகாலை கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து