எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து 6 போட்டியில் தோல்வி அடைவது மும்பை அணிக்கு இதுவே முதல் முறையாகும்.
முதல் முறையாக...
ஐ.பி.எல். 26-வது லீக் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் மோதின .இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த மும்பை அணிக்கு இது 6வது தோல்வி ஆகும் . மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டியிலும் தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கிறது .இது அந்த அணியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து 6 போட்டியில் தோல்வி அடைவது மும்பை அணிக்கு இதுவே முதல் முறையாகும் .இதற்கு முன்பு 2014ம் ஆண்டு அந்த அணி தொடர்ந்து 5 போட்டியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது
லக்னோ பேட்டிங்...
26-வது லீக் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது .தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக் ,கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடினர் .தொடக்க விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர் .இதனை தொடர்ந்து டி காக் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கே.எல்.ராகுல்...
பின்னர் வந்த மணிஷ் பாண்டே, ராகுலுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார் .பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்கவிட்டனர் .சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். மணிஷ் பாண்டே 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்தபிறகு அதிரடியாக விளையாடிய கே,எல் 56 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் .இதனால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 199 ரன்கள் எடுத்தது.ராகுல் 103 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
13 பந்துகளில்...
இதனை தொடர்ந்து 200 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி விளையாடியது .தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷான் களமிறங்கினர். ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார் .அவர் 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .தொடர்ந்து இஷான் கிஷான் 13 ரன்களில் ஆட்டமிழந்தார் .
லக்னோ வெற்றி...
பின்னர் சூர்யகுமார் யாதவ் , திலக் வர்மா நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்த்னர் .அணியின் ஸ்கோர் 121 ரன்களாக இருந்தபோது திலக் வர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார் ,அடுத்த ஓவரிலே சூர்யகுமார் யாதவ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த பொல்லார்ட் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது .இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |