முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு குறைகிறது: தமிழகத்தில் புதிதாக 38 பேருக்கு தொற்று

திங்கட்கிழமை, 9 மே 2022      தமிழகம்
India-Corona 2022 04 17

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. அந்தவகையில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று புதிதாக 13 ஆயிரத்து 678 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 25 பேரும், பெண்கள் 13 பேரும் உள்பட 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 20 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும் உள்பட 10 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் தொடர்ந்து 53-வது நாளாக கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி 454 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 62 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து  ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து