முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்ஷ், வார்னர் அபாரம்:ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி

வியாழக்கிழமை, 12 மே 2022      விளையாட்டு
12 Ram 60

Source: provided

மும்பை:

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து அசத்தியது.

டெல்லி பவுலிங்...

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஷ்வின் சிறப்பாக ஆடி 50 ரன்னும், தேவ்தத் படிக்கல் 48 ரன்னும் எடுத்தனர்.

டெல்லி வெற்றி...

டெல்லி சார்பில் சேட்டன் சகாரியா, அன்ரிச் நோர்ஜே, மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகர் பரத் டக் அவுட்டானார். அடுத்து டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடினார். இருவரும் கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். மிட்செல் மார்ஷ் 89 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், டெல்லி அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது டெல்லி அணிபெற்ற 6-வது வெற்றி ஆகும். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வெற்றி 6 தோல்வி உடன் 5வது இடத்தில் டெல்லி அணி உள்ளது.

BOX - 1

ரிவியு எடுக்காததால் தோல்வி

டெல்லி அணியின் 3வது ஓவரில் 3வது பந்தை ஏர்க்கராக போல்ட் வீசினார். இந்த பந்தில் எல்பிடபுல்யூக்கு விக்கெட் கேட்கும்போது நடுவர் தர மறுத்து விட்டார். 2 ரிவியுக்கள் மீதமிருந்த நிலையில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் எட்ஜ் என்று நினைத்து அதை அலச்சியமாக விட்டுவிட்டார். 

ஆனால் பந்து நெராக ஸ்டெம்பை நோக்கி போனது பேடில் பட்டு என்பது பிறகு தான் தெரிந்தது. அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது என்பதை அவர் அப்போது உணரவில்லை. 3 ஓவரிலே மார்ஷ் விக்கெட் எடுத்திருந்தால் ஆட்டமே மாறியிருக்கும். மார்ஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது ராஜஸ்தானுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து