முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை : கோவை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பேச்சு

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      தமிழகம்
RN-Ravi 2022 01 04

Source: provided

கோவை : மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை என்று கோவை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா பல்கலையின் உஷா கீர்த்திலால் மேத்தா அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி ஆகியோர் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இந்த  விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கை அந்தந்த மாநில மொழிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மொழியையும் ஊக்குவிக்கிறோம்.  தமிழ் மிகவும் பழமையான மொழி, இலக்கியச் செழுமை மிக்க மொழி. நாட்டின் மிகவும் முக்கியமான மொழி தமிழ் மொழி. மாநில மொழிகள் வளர வேண்டும். 

கடந்த 7 வருடங்களில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரட்டிப்பாக்கபட்டுள்ளது. நமது நாடு தன்னிறைவு பெற்ற நாடாக மாற வேண்டும். இந்த பயணத்தில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து