முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்காட்டில் வரும் 26-ம் தேதி கோடை விழா தொடங்கும் : அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      தமிழகம்
KN-Nehru 2022 01 19

Source: provided

சேலம் : ஏற்காட்டில் வரும் 26-ம் தேதி கோடை விழா தொடங்கும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, டைடல் பார்க் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ள இடங்களை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

ஏற்காட்டில் வரும் 26ம் தேதி கோடை விழா தொடங்கும். கோடை விழாவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவின் ஒருபகுதியாக அண்ணா பூங்காவில், மலர், மாம்பழம் மற்றும் காய்கறி கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து