முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய நடுவர்களின் 5 சர்ச்சை முடிவுகள்..!

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      விளையாட்டு
IPL-Referee 2022 05 13

நடப்பு ஐ.பி.எல் தொடரில் நடுவர்களின் 5 சர்ச்சை முடிவுகள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அவை ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளது. 

1) மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் பிரேவிஸ் பந்துவீச்சில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு எல்பிடபிள்யூ முறையில் அவுட் அறிவித்த நடுவர் விரேந்தர் ஷர்மாவால் சர்ச்சை ஏற்பட்டது.

2) லக்னோ அணியின் ஸ்டோநிஸ்-க்கு எதிரான ஆர்சிபி ஜோஷின் பந்து வீச்சில் வைட் பால் கொடுக்காத நடுவரால், ஆட்டம் லக்னோ அணியின் பிடியிலிருந்து நழுவிப் போனது.

3) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வில்லியம்சனுக்கு மூன்றாம் நடுவரால் கொடுக்கப்பட்ட அவுட் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. தேவ்தத் படிக்கலின் கேட்ச் சரியானதல்ல என்று நெட்டிசன்கள் ஆவேசமடைந்தனர்.

4) மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கேவின் உத்தப்பாவுக்கு மூன்றாம் நடுவர் கொடுத்த நாட் அவுட்டும் சர்ச்சையானது. மும்பை அறிமுக வீரர் ஹ்ரித்திக் சோகீனின் மெய்டன் விக்கெட் வாய்ப்பு இதனால் தகர்க்கப்பட்டது.

5) ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி ஓவரில் டெல்லி அணி முறையிட்டு "நோ பால்" மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் களத்திலிருந்த பேட்ஸ்மேன்களை திரும்ப அழைக்க முயன்றதால் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து