முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் படேல்

புதன்கிழமை, 18 மே 2022      இந்தியா
Hardik-Patel 2022 05 18

Source: provided

அகமதாபாத் : குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உட்கட்சிப்பூசல் காரணமாக ஹர்திக் படேல் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன.

2015-ம் ஆண்டு குஜராத்தில் சக்திவாய்ந்த பட்டிதார் சமூக இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹர்திக் படேல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு  முன்பு காங்கிரஸில் சேர்ந்தார். அவர் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராகவும் இருந்தார். கட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து கூறி வந்த ஹர்திக் படேல் திடீரென பாஜகவை புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பா.ஜ.க.வைப் பற்றி சில நல்ல விஷயங்கள் உள்ளன, அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்த கருத்து காங்கிரசிற்குள் புயலை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே  அரவிந்த கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் இணைய போவதாகவும் தகவல்கள் வந்தன. குஜராத் கட்சித் தலைமை தன்னை ஓரங்கட்டுவதாகவும், தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். சமீபத்தில் அவர், தன் பெயருடன் இருந்த ‘காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்’ என்ற தலைப்பை டுவிட்டரில் இருந்து நீக்கி இருந்தார்.

இந்த நிலையில், ஹர்திக் படேல் விரைவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து  விலகுவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், “தனது தைரியத்தைத் திரட்டி, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவை எனது ஆதரவாளர்களும், குஜராத் மக்களும் வரவேற்பார்கள். இதன் பிறகு நான் சிறப்பாக சேவையை மக்களுக்கு செய்ய முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து