எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.கவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
இதனிடைய, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதில், 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில், காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 3 இடங்களில் திமுக வேட்பாளர்களான சு.கல்யாணசுந்திரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் 10-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.கவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அ.தி.மு.க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது. கோரிக்கை குறித்து கடிதம் தந்ததற்கு ஆதரவு உண்டு என அண்ணாமலை தெரிவித்ததாக அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
இதனிடையே அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |