முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல்லில் 3 மையங்களில் பிடிபட்ட 5 கிலோ பிட் பேப்பர்: அறை கண்காணிப்பாளர்கள் 11 பேர் பணியிலிருந்து நீக்கம் : தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      தமிழகம்
Namakkal 2022-05-17

Source: provided

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் தேர்வு மையங்களில்  5 கிலோ பிட் பேப்பர் பிடிப்பட்டதை தொடர்ந்து தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 11 பேர் தேர்வு பணியிலிருந்து நீக்கம் செய்து தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 5-ம் தேதி (வியாழக்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வும், கடந்த 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிளஸ்-1 பொதுத் தேர்வும், 6-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வும் தொடங்கியது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்1, பிளஸ்-2 தேர்வுகள் 82 மையங்களில் மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர். தேர்வு மையங்களுக்கு 82 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 82 துறை அலுவலர்கள், 14 கூடுதல்துறை அலுவலர்கள், 1,200 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வை கண்காணிக்க அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் தலைமையில் 120 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஒவ்வொரு மையமாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி (திங்கட்கிழமை) பிளஸ்-1 வகுப்புக்கு உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளி விபரங்கள் உள்பட 11 பாடங்களுக்கு தேர்வுகள் நடந்தது. அப்போது இணை இயக்குனர் பொன்குமார் கொல்லிமலையில் உள்ள வாழவந்திநாடு ஜி.டி.ஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு பணி மேற்கொள்ள காரில் சென்றார். அப்போது சோளக்காடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடை, டீக்கடைகளில் மாணவர்கள் அதிக அளவில் கூட்டமாக நின்றனர்.

இதை கண்டு சந்தேகம் அடைந்த இணை இயக்குநர் பொன்குமார் காரை நிறுத்தி விட்டு அந்த கடைகளுக்குள் சென்றார். அங்கு மாணவர்கள் பிட் அடிப்பதற்காக பாட புத்தகங்களை சிறிய வகையிலான மைக்ரோ ஜெராக்ஸ் பிரிண்ட் எடுத்துக் கொண்டு இருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இணை இயக்குநர் பொன்குமார் மற்றும் பறக்கும் படையினர் மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து, அங்கிருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து மறுநாள் 17-ம் தேதி பிளஸ்-2 கணிதம், விலங்கியல், வணிகம், நர்சிங் உள்பட 10 பாடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் மாணவர்கள் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் அடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய இணை இயக்குனர் பொன்குமார் தனியாக ஒரு பறக்கும் படை குழுவினரை கொல்லிமலைக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் வாழவந்திநாடு உண்டு உறைவிட பள்ளியில் தேர்வு தொடங்குவதற்கு முன்பே அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கினர். அவர்கள் பறக்கும் படையினரிடம் குவியல் குவியலாக மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை கொடுத்தனர்.

இதேபோல் பறக்கும் படை குழுவினர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோதனை நடத்தினர். அங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுபோல் பள்ளிபாளையம் அரசு பள்ளியில் இருந்தும் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சில மாணவர்கள் சோதனையின் போது தாங்கள் மறைத்து வைத்திருந்த பிட் பேப்பர்களை ஜன்னல் வழியாக வெளியே வீசினர். மொத்தம் 5 கிலோ பிட் பேப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்வில் பிட் அடிக்க மாணவர்கள் தொடர்ந்து மைக்ரோ சைஸ் பிட் பேப்பர்கள் கொண்டு வந்ததால் நாமக்கல் மாவட்ட கல்விதுறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த பிட் பேப்பர்களை தயார் செய்து கொடுத்த சம்பந்தப்பட்ட ஜெராக்ஸ் கடை உரிமையாளர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் பள்ளிக்கல்வித்துறையின் தேர்வு விதிமுறைகளை மீறி எத்தனை நாட்களாக மாணவர்களுக்கு பள்ளி பாடபுத்தகங்களை மைக்ரோ சைஸாக மாற்றி தேர்வில் பிட் அடிப்பதற்கு எடுத்துக் கொடுக்கிறீர்கள்? என கேட்டும், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் பிட் அடிக்க ஏன் உதவினீர்கள் என கேட்டும் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் தேர்வு மையங்களில் பிட் பேப்பர் பிடிப்பட்ட வகுப்புகளில் பணியாற்றி வரும் 11 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் கூண்டோடு தேர்வு பணியிலிருந்து நீக்கி தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவர்கள் சரியாக செயல்படவில்லை என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தேர்வு அறைகளில் இன்று முதல் மாற்று கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் பொன்.குமார் கூறியதாவது.,

கொல்லிமலை ஜிடிஆர் உண்டு உறைவிடப் பள்ளியில் அரை கிலோ எடையளவில் காப்பி அடிப்பதற்காக மாணவர்கள் வைத்திருந்த விடை நகல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்குள்ள ஜெராக்ஸ் கடையில் இருந்து விடை நகல்கள் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதேபோல், குமாரபாளையம், பள்ளிபாளையத்திலும் ஜெராக்ஸ் கடைகளில் தவறுகள் நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டது. தேர்வின்போது பிடிபட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என்பதால், முன்னதாகவே அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மறைத்து வைத்திருப்பதை பறிமுதல் செய்து வருகிறோம். காப்பி அடிப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த விவகாரத்தில் 11 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் கூண்டோடு தேர்வு பணியிலிருந்து நீக்கம் செய்து தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து