முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2025      தமிழகம்
Duraimurugan 2022 12 11

வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை  என்று காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆதங்கத்துடன் பேசினார்.

வேலூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் தொடக்கவிழா காட்பாடி செங்குட்டையில் நேற்று (ஜூலை 15) நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முகாமை தொடங்கி வைத்து பேசும்போது, "பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக அளிக்கும் மனுக்களுக்கு சாக்கு, போக்கு சொல்லாமல் உடனடியாக நிவர்த்தி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் இங்கு வந்ததில் இருந்து சிறப்பாக வேலை செய்கிறார். அவர் மட்டும் வேலை செய்தால் போதாது. உடன் இருக்கின்ற அதிகாரிகளும் சரியாக இருந்தால் தான் பரிகாரம் கிடைக்கும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை. எனவே, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலினை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில், 'நடிகர் ரஜினிகாந்த் சீனியர்களின் ஆலோசனை ரொம்ப முக்கியம் என பேச நினைத்ததை மறந்துவிட்டேன்' என நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்’ என்ற கேள்விக்கு, துரைமுருகன் கூறும்போது, 'நானும் அந்த வீடியோவை பார்த்தேன். அவரை செல்போனில் தொடர்புகொண்டு இப்பவாச்சும் மறக்காம பேசுனீங்களே ரொம்ப தேங்க்ஸ் சார் என்றேன்' என கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து