முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் அச்சப்பட தேவையில்லை: குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் தீவிர கண்காணிப்பு : அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Ma Subramanian 2022 05 24

Source: provided

கன்னியாகுமரி : மக்கள் அச்சப்பட தேவையில்லை. பதட்டப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் சுப்பிரமணியன் குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது- குமரி மாவட்டத்தில் மருத்துவதுறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் கருவிகள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது குரங்கம்மை நோய் பரவி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ள நிலையில் குரங்கு அம்மை நோய் தொடங்கி உள்ளது. கொரோனா வைரசை பொறுத்த மட்டில் கொரோனா, ஆல்பா, டெல்டா பிளஸ், ஒமைக்கிரான் மற்றும் ஒமைக்கிரானில் 7 வகை வைரஸ்கள் அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது குரங்கம்மை என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கியுள்ளது 

பொதுவாக இது பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை. பதட்டப்பட தேவையில்லை என்ற அறிவுறுத்தலை நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகளில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த நாடுகளை பொறுத்த மட்டில் ஏற்கனவே இது போன்ற வைரஸ்கள், புதிய தொற்றுகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்துதான் பயமுறுத்தும். ஆனால் இது முற்றிலுமாக அந்த நாடுகளை தவிர்த்து புதிதாக இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் இருந்து தோன்றியுள்ளது. அந்த நாடுகளிலும் இந்த நோயால் எந்த உயிரிழப்பும் இல்லை. குறிப்பிட்ட இந்த நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம்.

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணித்து அவர்களது முகங்களில் உடல்களிலும் மாற்றம் தெரிந்தால் அவர்களை சோதனைக்கு உட்படுத்தி அதை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப நடவடக்கை எடுக்கப்படும். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!