முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலத்தில் காங். கட்சியின் முதல் பெண் எம்.எல்.ஏ பதவியேற்பு

புதன்கிழமை, 15 ஜூன் 2022      இந்தியா
Uma-Thomas 2022-06-15

Source: provided

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திரிக்ககரா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற உமா தாமஸ், கேரள சட்டப்பேரவை உறுப்பினராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

கேரள சட்டப்பேரவையில் இரண்டுமுறை உறுப்பினராக இருந்த பி.டி. தாமஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி உமா தாமஸ் தேர்தலில்போட்டியிட்டார். இவர் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். 140 பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவையில் ஆளும் இடதுசாரிக் கட்சிக்கு 99 உறுப்பினர்களும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக்கு 41 உறுப்பினர்களும் உள்ளன. 

உமா நேற்று எம்எல்ஏவாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருப்பதன் மூலம், கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே பெண் எம்எல்ஏவாக இருப்பார். சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவைத் தலைவர் எம்.பி. ராஜேஷ் அலுவலக அறையில், அவைத் தலைவர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து