முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்து வரும் ஐ.பி.எல். போட்டியில் ஆட்டங்களின் எண்ணிக்கை உயராது பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி தகவல்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      விளையாட்டு
gangooli-2022-06-16

Source: provided

மும்பை: அடுத்த இரு வருடங்களுக்கு ஐ.பி.எல் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்காது என பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டியளித்துள்ளார்.

ரூ.48,390.5 கோடி...

ஐ.பி.எல் போட்டியை 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் எண்ம (டிஜிட்டல்) ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஏலத்தில் விட்டதன் மூலம் மொத்தமாக ரூ.48,390.5 கோடி வருவாய் ஈட்டவுள்ளது பிசிசிஐ. தொலைக்காட்சி ஒளிபரப்பில் டிஸ்னி ஸ்டார் நிறுவனமும் டிஜிடல் ஒளிபரப்பில் வையாகாம் நிறுவனமும் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான உரிமைகளைப் பெற்றுள்ளன.  இதனால் ஐ.பி.எல் போட்டியில் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இரண்டரை மாதங்கள்... 

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது: அடுத்த ஐசிசி எஃப்டிபி அட்டவணையில் (2023 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு), ஐ.பி.எல் போட்டிக்காக இரண்டரை மாதங்கள் ஒதுக்கப்படும். இதன்மூலம் எல்லா சர்வதேச கிரிக்கெட் வீரர்களாலும் ஐ.பி.எல் போட்டியில் கலந்துகொள்ள முடியும். ஐசிசி மற்றும் இதர கிரிக்கெட் வாரியங்களுடன் இதுபற்றி விவாதித்துள்ளோம் என்றார். 

74 ஆட்டங்கள்... 

ஐ.பி.எல் 2022 போட்டியில் மொத்தமாக 74 ஆட்டங்கள் நடைபெற்றன. ஐ.பி.எல் தொடங்கப்பட்ட 2008-ம் வருடம் 59 ஆட்டங்களே நடைபெற்றன. 2023, 2024 ஆகிய இரு ஆண்டுகளில் தலா 74 ஆட்டங்களை நடத்தவும் அதற்கடுத்த இரு ஆண்டுகளில் தலா 84 ஆட்டங்களை நடத்தவும் பிசிசிஐ திட்டுமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

வீரர்களுக்கு முக்கியம்...

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதாவது., இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள் தொடர்ந்து நடைபெறும். ஐ.பி.எல் என்பது ஓர் இந்தியப் போட்டி. இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள் மற்ற நாடுகள் வருமானம் ஈட்ட நடத்தப்படுகின்றன. மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு அவை முக்கியம். அடுத்த இரு வருடங்களுக்குத் தலா 74 ஐ.பி.எல் ஆட்டங்கள் நடைபெறும். அதற்கு மேல் ஆட்டங்களின் எண்ணிக்கை உயர வாய்ப்பில்லை. அடுத்த எஃப்.டி.பி. அட்டவணையைக் கவனமாகத் திட்டமிட வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து