முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான நிலையத்துக்கு இணையாக திருச்சியில் பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      தமிழகம்
CM-1-2025-05-09

திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டலின், விமான நிலையத்துக்கு இணையாக பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்வர் திறந்து வைத்து உரையாற்றினார். இந்த பேருந்து முனையம் ரூ.408.36 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பேருந்து முனையத்தை திறந்துவைத்த முதல்வர், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் அது பற்றியும் கேட்டறிந்தார்.

பஞ்சப்பூர் பேருந்து முனையத்தைத் திறந்துவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இது பஞ்சப்பூர் அல்ல, எல்லா ஊரையும் மிஞ்சப்போகிற மிஞ்சப்பூர் என்று தோன்றியது. மேலும், திருச்சி விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மின் தூக்கி, நகரும் படிகட்டு, ஏசி வசதி என விமான நிலையத்துக்கு இணையான வசதிகள் உள்ளன. தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சிக்கு இப்படியொரு பேருந்து முனையம் அவசியம். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போல திருச்சியில் காமராஜர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இடைநிற்றல் கூடாது என மாணவர்களை தேடிப்போய் மீண்டும் பள்ளிக்கு அனுப்பினோம் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து