முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 2 நாட்களாக கனமழை: 2-வது நாளாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

புதன்கிழமை, 22 ஜூன் 2022      இந்தியா
Kashmir 2022-06-22

Source: provided

ஜம்மு : ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தோடா, கிஷ்த்வார், ராம்பன் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் மூடப்பட்டது.

காஷ்மீரின் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருவதால், நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ராம்பான் மாவட்டத்தில் வீடு இடிந்து விபத்துக்குள்ளான சம்பவமும் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஆன்ஸ் ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேர் காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலை மாவட்டத்தின் பல பகுதிகளில் தோடா மாவட்ட நிர்வாகம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. ராம்பன்-உதம்பூர் செக்டாரில் பெய்த கனமழையால் 30க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள்  மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 270 கிலோமீட்டர் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை மூடப்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்களின் நலன் கருதி தோடாவைத் தவிர, ராம்பான் மற்றும் கிஷ்த்வார் ஆகிய மாவட்டங்களின் துணை ஆணையர்களும் தனியார் பள்ளிகள் உள்பட உயர்நிலை வரையிலான அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து