முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1974-ல் உருவாக்கிய தன்னுடைய 'ரெஸ்யூமை' பகிர்ந்த பில்கேட்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      உலகம்
bill-Gates 2022 07 03

Source: provided

வாஷிங்டன் : 1974-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தன்னுடைய ரெஸ்யூமை பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார். 

மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர் பில் கேட்ஸ். தற்போது 66 வயதாகும் பில் கேட்ஸ் 1975-ம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது அவரது நண்பர் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார். உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் பெற்றதால் இவர் பெரும் செல்வந்தரானார். 

இந்த நிலையில் பில் கேட்ஸ் தனது "லிங்க்டு இன் " பக்கத்தில் 1974-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தன்னுடைய ரெஸ்யூமை பகிர்ந்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு படித்த போது இந்த ரெஸ்யூமை அவர் தயார் செய்திருக்கிறார். தன்னுடைய சுயவிவர குறிப்புகள் பற்றி பல தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. 

ரெஸ்யூம் புகைப்படத்தை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  நீங்கள் சமீபத்தில் கல்லூரி பட்டம் பெற்று இருந்தாலும் அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவராக இருந்தாலும் சரி, 48 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்ததை விட உங்கள் ரெஸ்யூம் மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது ரெஸ்யூம் தற்போது வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!