முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

சனிக்கிழமை, 27 டிசம்பர் 2025      உலகம்
Corona 2023 04 02

சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத  ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட மாற்று தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்காக ‘அபய்ராப்’ என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘அபய்ராப்’ மருந்து ஐதராபாத்தைச் சேர்ந்த இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஹியூமன் பயோலாஜிகல்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் ‘அபய்ராப்’ தடுப்பூசியின் போலியான தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இந்தியாவில் 2023 நவம்பர் 1-ந்தேதி முதல் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களுக்கு வெறிநாய்க்கடி நோயில் இருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அந்த தடுப்பூசியை போட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட வெறிநாய்க்கடி தடுப்பூசியின் மாற்று தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு ஆஸ்திரேலிய அரசு பரிந்துரை செய்துள்ளது. மேலும், 2023 நவம்பர் 1-ந்தேதி முதல் இந்தியாவில் ‘அபய்ராப்’ தடுப்பூசியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ்களைப் பெற்றவர்கள் அனைவரும் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து