முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கி., 284 ரன்களுக்கு ஆல் அவுட்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      விளையாட்டு
Indian-team 2022 07 03

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

416 ரன்கள்...

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. 

பேர்ஸ்டோ அவுட்...

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்த்து திணறி வந்தது.நேற்று தொடங்கிய 3-வது நாள் போட்டியில் ஒருமுனையில் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாட மறுமுனையில் ஸ்டோக்ஸ் 25 ரன்களில் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பேர்ஸ்டோ சவால் அளித்து வந்தார். பவுண்டரிகளாக விரட்டி அதிரடி காட்டிய அவர் 119 பந்துகளில் சதம் அடித்த அவர் 106 ரன்களில் ஷமி பந்துவீச்சில் வெளியேறினார்.

284 ரன்களுக்கு... 

தொடர்ந்து சாம் பில்லிங்ஸ் 36 ரன்களிலும் , பிராட் 1 ரன்களிலும் ,போட்ஸ் 19 ரன்களிலும் தனது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் ,ஷமி 2 விக்கெட்டும் ஷர்துல் தாக்குர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 132ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து