முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      விளையாட்டு
Sania-Mirza 2022 07 05

Source: provided

லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. முதல் முறையாக கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2003-ம் ஆண்டு முதல்...

இந்தியாவைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 35 வயதான அவர் கடந்த 2003 முதல் டென்னிஸ் கோர்ட்டில் ராக்கெட் ஏந்தி விளையாடி வருகிறார். கடந்த 2008 வரையில் ஒற்றையர் பிரிவில் மிகவும் பிசியாக கிராண்ட் ஸ்லாம் உட்பட பல்வேறு சர்வதேச டென்னிஸ் தொடர்களில் விளையாடி வந்தார் சானியா. அதன் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்டு இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார்.

ஒற்றையர் பிரிவில் ஓய்வு...

2013 வாக்கில் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா 3 என மொத்தம் 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியாவின் உச்ச டென்னிஸ் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவர்.

அரையிறுதிக்கு தகுதி...

இப்படி பல சாதனைகளை படைத்த அவர் கடந்த ஜனவரி வாக்கில் ஆஸ்திரேலிய ஒபனுக்கு பிறகு ஓய்வு குறித்து பகிரங்கமாக பேசி இருந்தார். இது தனது கடைசி சீசன் எனவும் அப்போது சொல்லி இருந்தார். இந்நிலையில், நடப்பு விம்பிள்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையாக அறியப்படுகிறார் சானியா.

குரோஷிய வீரருடன்...

இப்போது அவர் விம்பிள்டனில் குரோஷியா வீரர் மேட் பேவிக் உடன் இணைந்து விளையாடி வருகிறார். காலிறுதியில் சானியா ஜோடியினர் தங்களை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஜான் பீயர்ஸ் மற்றும் கனடா வீராங்கனை கேப்ரியலா டப்ரோவ்ஸ்கியை 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். சானியா ஜோடி அரையிறுதியில் யாரை எதிர்த்து விளையாடுகிறார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. கடந்த 2015 விம்பிள்டனில் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து