முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை கணக்கெடுக்க வேண்டும்: அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2022      ஆன்மிகம்
Chennai-High-Court 2021 3

தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் பற்றி கணக்கெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு 2020-ம் ஆண்டு பிறப்பிக்கபட்ட உத்தரவின்படி கோவில் பணியாளர்களின் நிபந்தனைகளின் படி இல்லாமல் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கிறார்கள். அது ஆகம விதிகளுக்கு முரனானது. எனவே ஆகம விதிகளை பின்பற்றி அர்ச்சகர்கர்களை நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. 

மத்தியப்பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் இந்த வழக்கை விசாரனைக்கு கேட்கக்கூடாது என்று தலைமை நீதிபதி தமிழக அரசு தரப்பில் வாதிடபட்டது. அதே சமயம் ஆகம விதிகளை பின்பற்றுகின்ற கோவில் பின்பற்றாத கோவில்கள் என்றும் அறநிலையத்துறை கணக்கெடுத்து வருவதாகவும் இந்த வழக்கு தற்போது தேவையற்றது என்றும் நீதிபதிகள் முன்பாக அரசு தலைமையில் விளக்கமளித்தார்.

அப்போது நீதிபதிகள் ஆகம விதிகளின் கீழ் எந்தெந்த கோவில்கள் வருகின்றன. ஆகம விதிகளை பின்பற்றாத கோவில்கள் எவை என்றும் அடையாளம் காட்ட வேண்டும் என்றும் அதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் அந்த பணிகளுக்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற  நீதிபதி ஒருவரை நியமிக்கலாம் என்றும் தமிழக அரசு பரிந்துரை செய்யப்பட்டது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமித்து பணிகளை ஒரு மாதத்தில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக எந்த நடவடிக்ககளை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரனையை தள்ளி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!