முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரக்சாபந்தன் தினத்தை முன்னிட்டு 2 நாட்களுக்கு உ.பி. மற்றும் அரியானாவில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      இந்தியா
Yoki 2022-08-10

Source: provided

லக்னோ : ரக்சாபந்தன் தினத்தை முன்னிட்டு உ.பி., மற்றும் அரியானாவில் பெண்கள் 2 நாட்களுக்கு பெண்கள் அரசு பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரக்சாபந்தன் தினம் ஆண்டுதோறும், சகோதரர் மற்றும் சகோதரியின் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்சாபந்தன் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், உத்தர பிரதேச அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் (நேற்று) ஆகஸ்ட் 10 நள்ளிரவு தொடங்கி ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரை பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார். இதை தவிர அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் 60 வயதிற்கு மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், அரியானா அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் நேற்று நண்பகல் 12 மணி முதல் இன்று (11-ம் தேதி) அதிகாலை 12 மணி வரை பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டும், இதேபோன்றதொரு அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டது. 

அரியானாவில் ரக்சாபந்தன் தினத்தில், பெண்கள் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இலவச பேருந்து பயணம் செய்வதற்கான அனுமதியை முதல்-மந்திரி கடந்த ஆண்டு வழங்கினார். இதனால், சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களின் வீடுகளுக்கு சென்று ராக்கி கயிறுகளை கட்டி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து