முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 16,047 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      இந்தியா
India-Corona 2022-07-23

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் 16,047 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சில நாட்களாக உயர்ந்து வந்த தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் சற்று குறைந்தது. இந்தநிலையில் நேற்று முடிவடைந்த 24 மணி நேரத்தில், இது 16 ஆயிரத்து 047 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் 12,751 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 16,047 ஆக அதிகரித்துள்ளது.ஒரே நாளில் 19,539 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,35,35,610 ஆனது.நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,31,807 லிருந்து 1,28,261 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக பதிவானது. இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 8226 பேர் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,07,03,71,204 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 15,21,429 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து