முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜெகதீப் தங்கர் ஜனாதிபதி திரெளபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      இந்தியா
jegadeep-2022-08--11

Source: provided

புதுடெல்லி: நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீப் தங்கர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 10-ம் தேதியுடன்) நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜெகதீப் தங்கர், துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அதேபோல, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டார்.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர், மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 780 வாக்காளர்களில், 725 பேர் வாக்களித்திருந்தனர். அதாவது மொத்தம், 92.94 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன.பதிவான வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. பதிவான வாக்குகளில் ஜெகதீப் தங்கர் 528 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜெகதீப் தங்கர் நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் கிதானா கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். வழக்கறிஞரான இவர் சில காலம் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றியுள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார். பாஜகவில் இணைந்து அரசியல் வாழ்வைத் தொடங்கிய இவர் 1989-ம் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2021-ம் ஆண்டு மேற்கு வங்க மாநில கவர்னராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். அங்கு ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுடன் இவருக்கு மோதல் போக்கே நிலவியது. இதற்கிடையில், 14-வது துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றதை அடுத்து துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து