Idhayam Matrimony

சென்னை கலைவாணர் அரங்கில் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-3 2022 01 12

Source: provided

சென்னை : சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கலை-பண்பாட்டுத்துறை, இயல்-இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகத் தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தை தமிழகம் முழுவதும் நடத்தும் வகையிலான இலச்சினையினை வெளியிட்டு, நாடகத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாகக் கொண்ட வீரமங்கை வேலுநாச்சியார், ஆங்கிலேயப் படையெடுப்பால் கணவரை இழந்ததோடு, நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் இருந்தது.  மருது சகோதரர்கள் ஆதரவுடனும், ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையினை உருவாக்கி, ஏழு ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றி பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். 

இதனைத் தொடர்ந்து 1789-ம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார். வடஇந்திய ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி வேலுநாச்சியார் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஈடாக எவரும் இல்லை. சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 25.12.1896ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் கலைப்பண்பாட்டுத் துறை மூலம் ஓ.வி.எம்.தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்கும் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. 

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி, ஈரோடு மாவட்டத்தில்  15.08.2022 அன்று சி.என்.சி.கல்லூரியிலும், மதுரை மாவட்டத்தில் 21.08.2022 அன்று இராஜா முத்தையா மன்றம் அரங்கிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 22.08.2022 அன்று கலையரங்கத்திலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 28.08.2022 அன்று இந்துஸ்தான் கல்லூரி அரங்கத்திலும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ. வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றததின் தலைவர் வாகை சந்திரசேகர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி, ஸ்ரீராம் சர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து