Idhayam Matrimony

பிரதமரிடம் இருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானது : கேப்டன் ஹர்மன்ப்ரீத் கருத்து

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Harmanpreet 2022 01 13

Source: provided

புதுடெல்லி : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நேற்று விருந்தளித்தார். அப்போது ஒரு நாட்டின் பிரதமரிடமிருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானதென மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கருத்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் விருந்து...

காமன்வெல்த்தில் இம்முறை இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடம் பிடித்தது. பதக்கங்களைப் பெற்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி பாராட்டியதுடன், அவர்களுக்கு பிரதமர் மாளிகையி ல் நேற்று காலை 11 மணிக்கு விருந்து அளித்தார். 

முதன்முறையாக... 

மகளிர் கிரிக்கெட் இந்தாண்டு காமன்வெல்த்தில் முதன்முறையாக சேர்க்கப்பட்டது. இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் தோல்வியுற்றது. வெள்ளி பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஹர்மன்ப்ரீத் பிரதமர் அளித்த விருந்தில் கலந்துக் கொண்டார். அவர் பேசியதாவது.,

உறுதுணையாக...

ஒரு நாட்டின் பிரதமரிடமிருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானது. பிரதமர் மோடி எங்களிடம் பேசும்போது ஒட்டுமொத்த நாடும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதாக இருந்தது. அனைவரும் எங்களது கடின உழைப்பை பாராட்டினர். இது மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய சாதனை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து