முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      சினிமா
Vijay-Devarakonda 2022-08-1

Source: provided

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை அனன்யா பாண்டே, விநியோகஸ்தர் மற்றும் நடிகர் ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, லைகர் மரண மாஸ் திரைப்படமாக இருக்கும் என கூறினார். மேலும், தமிழில் லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளதாக கூறிய அவர், அந்த இயக்குனர்களிடம் நான் பேசி உள்ளேன் என தெரிவித்தார். அவர்களிடம் அழைப்பு வந்தால் நிச்சயம் நடிக்க தயாராக இருக்கிறேன். அதிலும் லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் இணைய காத்திருக்கிறேன். அது நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் விஜய் தேவரகொண்டா கூறினார். அதுவரை தான் நடிக்கும் திரைப்படங்களை தமிழில் டப் செய்து வெளியிடப்படும் எனவும் கூறினார். பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் வரும் 25 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து