முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி: கிரிக்கெட் வீரர் உன்முக்த் சந்த்

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      விளையாட்டு
Unmukt-Chand 2022-10-01

Source: provided

19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சந்த், அமெரிக்காவில் நடந்த மைனர் லீக் கிரிக்கெட் போட்டியில் சிலிக்கான் வேலி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடும் போது இந்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவரது இடது கண் கடுமையாக வீங்கியுள்ளது. இதனால் அவரால் கண்ணை திறக்க முடியவில்லை. அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒரு தடகள வீரருக்கு இது ஒருபோதும் சுமூகமான சவாரி அல்ல. சில நாட்களில் நீங்கள் வெற்றியுடன் வீட்டுக்கு வருகிறீர்கள், மற்ற நாட்களில் ஏமாற்றத்துடன் வருவீர்கள். மேலும் சில நாட்களில் காயங்கள் மற்றும் தழும்புகளுடன் வீட்டுக்கு வருவீர்கள். பேரழிவில் இருந்து தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி. கடினமாக விளையாடுங்கள் ஆனால் பாதுகாப்பாக இருங்கள். இது ஒரு மெல்லிய கோடு. வாழ்த்துக்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

_____________

இரானி கோப்பையில் சர்ஃபராஸ் கான் சதம்

இரானி கோப்பைப் போட்டியில் செளராஷ்டிரம் அணிக்கு எதிராக சதமடித்துள்ளார் ரெஸ்ட் ஆஃப் இந்தியா வீரர் சர்ஃபராஸ் கான்.  ராஜ்கோட்டில் அக்டோபர் 1-5 தேதிகளில் நடைபெறும் இரானி கோப்பைக்கான போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா - ரஞ்சி சாம்பியன் செளராஷ்டிரம் ஆகிய அணிகள் மோதுகின்றன. நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் சாய் கிஷோருக்கு 11 பேருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. 

டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. புஜாரா இடம்பெற்றிருந்த செளராஷ்டிரம் அணி 24.5 ஓவர்களில் 98 ரன்களுக்குச் சுருண்டது. முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் சென், உம்ரான் மாலிக் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்கள். புஜாரா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.  இதன்பிறகு பேட்டிங் செய்த  ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் நாள் முடிவில் 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் விஹாரி 62 ரன்களுடனும் சர்ஃபராஸ் கான் 125 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

_____________

ரன் அவுட் சர்ச்சை விவகாரம்: பென் ஸ்டோக்ஸ் கேள்வி ?

பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். அவர் கூறியதாவது: ஹர்ஷா, மன்கட் விவகாரத்தில் (ரன் அவுட்) மக்களின் கருத்துகளைக் கொண்டு கலாசாரத்தை விமர்சனம் செய்யலாமா? 2019 உலகக் கோப்பை நடைபெற்று இரண்டு வருடங்களாகி விட்டன. இன்றைக்கும் பலவிதமாக என்னைத் திட்டிப் பதிவுகள் எழுதுகிறார்கள் இந்திய ரசிகர்கள். இது உங்களைத் தொந்தரவு செய்யவில்லையா? இந்த விவகாரம் தொடர்பான (இங்கிலாந்து வீரர்களின் கருத்துகள்) கலாசாரம் தொடர்புடையதா? நிச்சயமாக இல்லை. 

ஓவர்த்ரோ தொடர்பாக உலகெங்கும் உள்ள ரசிகர்கள் என்னிடம் கருத்து தெரிவிகிறார்கள். அதேபோல மன்கட் விக்கெட் தொடர்பாக எல்லோரும் கருத்து தெரிவிக்கிறார்கள். இங்கிலாந்து மக்கள் மட்டுமா இதற்குக் கருத்து தெரிவித்தார்கள்? ரன் அவுட் சம்பவம் தொடர்பாக உலகில் உள்ள மற்றவர்களின் கருத்து என்ன? ரன் அவுட் சம்பவம் தொடர்பாக நான் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்துக்குள் இங்கிலாந்து கலாசாரத்தைக் கொண்டு வருவதைப் பற்றியே பேசுகிறேன் என்றார். 

_____________

கோலியின் சாதனையை சமன் செய்த பாபர் அசாம்

இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையிலான 6-வது டி20 போட்டி லாகூரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான், கேப்டன் பாபர் அசாம் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் . தொடர்ந்து 170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பில் சால்ட் அதிரடியால் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் 87 ரன்கள் அடித்ததன் மூலம் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து