முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி : ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன் உறுதி

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      உலகம்
Joe-Biden 2022--10-05

Source: provided

வாஷிங்டன் : உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி செய்யப்படும் என்று ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன் தொலைபேசியில் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொலை பேசி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொலைபேசியின் உரையாடலின் போது, புதிதாக 625 மில்லியன் டாலர் அளவுக்கு உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்யப்படும் என்று ஜெலனஸ்கியிடம் அதிபர் ஜோபைடன் உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வரை உக்ரைனுக்கு ஆதரவைத் தொடரும் என்றும், நான்கு உக்ரேனிய பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதாக கூறப்படுவதை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து