முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி பிரதமரான பிறகுதான் வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சி தொடங்கியது : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2022      இந்தியா
AMIT-SHAH 2022 01 11

Source: provided

காங்டாக் : சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்கள் சுற்றுலா தலமாக மட்டுமே கருதப்பட்டது என அமித்ஷா தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிக்கிம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் காங்டாகில் உள்ள கவர்னர் மாளிகையில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை நேற்று திறந்து வைத்தார். அதன்பின், காங்டாகில் நடைபெற்ற கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களின் கூட்டுறவு பால் மாநாட்டில் பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நரேந்திர மோடி அரசாங்கம் சுமார் 65 ஆயிரம் முதன்மை வேளாண்மை கடன் சங்கங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு முதன்மை வேளாண்மை கடன் சங்கம் மற்றும் பால் பண்ணையை அமைக்க என முடிவு செய்துள்ளோம்.

சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில், பிரதமராக நரேந்திர மோடி வருவதற்கு முன்பு, வடகிழக்கு மாநிலங்கள் சுற்றுலா தலமாக மட்டுமே கருதப்பட்டது. அவர் பிரதமரான பிறகுதான் வடகிழக்கு மாநிலங்களில் உண்மையான வளர்ச்சி தொடங்கியது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து