முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதன்முறையாக வெளியுலகுக்கு தனது மகளை அறிமுகப்படுத்திய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022      உலகம்
KIM 2022-11-19

முதன்முறையாக ஏவுகணை சோதனை நிகழ்வின் போது, தனது மகளையும் உடன் அழைத்து சென்ற கிம், அது தொடர்புடைய புகைப்படங்களை முதன்முறையாக உலகிற்கு நேற்று தெரியப்படுத்தி உள்ளார்.

வட கொரிய அதிபர் கிம்முக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர் என நம்பப்படுகிறது. அவர்களில் ஒருவர் கடந்த செப்டம்பரில் நடந்த தேசிய விடுமுறை தின கொண்டாட்டத்தின் போது, வெளியான புகைப்படத்தில் காணப்பட்டார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், முதன்முறையாக ஏவுகணை சோதனை நிகழ்வின் போது, தனது மகளையும் உடன் அழைத்து சென்ற கிம், அது தொடர்புடைய புகைப்படங்களை முதன்முறையாக உலகிற்கு நேற்று தெரியப்படுத்தி உள்ளார். அதில், வெண்ணிறத்தில் கோட் ஒன்று அணிந்தபடி தனது தந்தையின் கைகளை பிடித்தபடி கிம்மின் மகள் நடந்து செல்கிறார்.

கிம்முக்கு மகள் இருப்பது பற்றி வெளியுலகுக்கு இதற்கு முன்பு தெரியாத நிலையில், இது பெரிய ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது என அந்நாட்டில் இருந்து வெளிவரும் கே.சி.என்.ஏ. என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், கிம்மின் மகள் பெயர் வெளியிடப்படவில்லை. வெளியுலகிற்கு கிம்மின் மகள் அடையாளப்படுத்தப்பட்டு இருப்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து