முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை: இலங்கை அரசு

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      உலகம்
drug--Sri-Lanka-2022 11 24

போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. 

5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. நேற்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. 

கடந்த அக்டோபர் 19-ம் திகதி, நச்சுப்பொருள், அபின், அபாயகர மசோதா சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த மசோதாவில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார். போதைப்பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து