முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 ஆண்டுகளில் கோவா வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      இந்தியா
Modi 2022-11-24

Source: provided

புதுடெல்லி: கோவாவின் வளர்ச்சியை வலுப்படுத்த மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது என ரோஜ்கார் மேளாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

உலகில் மக்கள் தொகை பெருக்கம் நிறைந்த நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. பரப்பளவில் சீனாவுடன் ஒப்பிடும்போது, மிக சிறிய நாடாக இந்தியா உள்ளது.

ஒருபுறம் வளங்கள் பல நிறைந்த நாடாக இருந்தபோதும், வேலையில்லா திண்டாட்டமும் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், இளைஞர்களின் கனவை பூர்த்தி செய்யும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் மேளா திட்டம் சமீபத்தில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு பணி நியமன கடிதங்களை அவர் வழங்கினார்.

இந்த நிலையில், ரோஜ்கார் மேளா திட்டத்தின்படி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கோவாவில் நடத்தப்படும் ரோஜ்கார் மேளாவில் வீடியோ வழியே பிரதமர் மோடி பேசினார்.

அவர் கூறும்போது, கோவா ரோஜ்கார் மேளா வழியே இளைஞர்கள் நியமன கடிதங்களை பெறுகின்றனர். உங்களது அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த 25 ஆண்டுகள் தற்போது துவங்குகின்றன. 2047-ம் ஆண்டில் நாட்டின் மற்றும் கோவாவின் வளர்ச்சியை உறுதி செய்வது தற்போது உங்களிடம் உள்ளது என பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தொடர்ந்து, நாட்டில் பா.ஜ.க. ஆளக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் ரோஜ்கார் மேளா ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. கோவா அரசும் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பும் வேலைகளில் இறங்கியுள்ளது. அதிக அளவில் நியமன கடிதங்கள் நேற்று வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

வரவுள்ள மாதங்களில் கோவா காவல் துறையும் ஆள்சேர்ப்பில் ஈடுபடும். அது கோவா காவல் துறையை வலிமையாக்கும். கோவாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் முதலீடு செய்துள்ளது. கோவாவின் மொப்பா நகரில் விமான நிலையம் கட்டமைக்க ரூ.3 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து