எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புது டெல்லி ; 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம்(டிசம்பர்) 17-ம் தேதி காணொலி வாயிலாக நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது, கேசினோ, ரேஸ் கோர்ஸ், ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத வரி விதிப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் தலைவராக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளார். குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த கவுன்சில் கூடி, வரி விதிப்பு மாற்றங்கள், புதிய வரி விதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தும். இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை செயலாளர்கள் என பலர் கலந்து கொள்வார்கள்.
47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த ஜூன் 28, 29-ம் தேதிகளில் சண்டிகரில் நடந்தது. இதில் அரிசி, பேக்கிங் கோதுமை மாவு, அப்பளம், தயிர், தேன், மோர், லஸ்சி, கத்தி பிளேடு, ஷார்ப்பனர், பென்சில், மருத்துவமனை அறை, எல்.இ.டி விளக்குகள், சோலார் வாட்டர் ஹீட்டர்கள், காசோலை போன்றவற்றுக்கு வரி விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டிசம்பர் 17-ம் தேதி காணொலி மூலம் நடைபெறும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது மற்றும் கேசினோ, ரேஸ் கோர்ஸ் மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீதம் வரி விதிப்பது போன்றவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் ஏராளமான தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் வகையில் ஆன்லைன் விளையாட்டுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீதத்திற்கு பதிலாக 28 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கேசினோ, ரேஸ் கோர்ஸ் மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றுக்கு 28 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மேகலாயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தங்களது அறிக்கையை கடந்த வாரம் சமர்ப்பித்தது.
இதே போல், ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநில அரசுகள் சம்மதித்தால் நாங்களும் தயாராக உள்ளோம் என்று ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கடந்த 14-ம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
கனமழை காரணமாக இமாசலில் 69 பேர் பலி
05 Jul 2025சிம்லா, இமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் முகாமை ஜூலை 15-ல் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் முகாமை ஜூலை 15-ல் சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025