முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      விளையாட்டு
India-New-Zealand 2022-11-2

Source: provided

ஹாமில்டன் : நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. 

பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக ஷிகர்தவான், சுப்மன்கில் களமிறங்கினர். இந்திய அணி 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 

மழையால் ஆட்டம் சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்ற பின் இந்த போட்டி 29 ஓவர்கள் (ஒரு அணிக்கு) கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டுள்ளதாக நடுவர்கள் அறிவித்தனர். 

ஆட்டம் தொடர்ந்த பிறகு தவான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார், கில் உடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்திய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது. கில் 45 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில் ஹாமில்டனில் மழை தொடர்வதால் இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனால் வரும் 30ஆம் தேதி நடைபெறும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும். ஒருவேளை அந்த போட்டியும் மழையால் கைவிடவிடப்பட்டால் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து