முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம்

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      ஆன்மிகம்
thirupathi-2022 11 23

Source: provided

திருப்பதி : திருப்பதியில் இன்று முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கான டிக்கெட் கவுண்ட்டர் திருப்பதி மாதவம் ஓய்வு இல்லத்தில் தொடங்கப்படுகிறது.

இன்று (வியாழக்கிழமை) முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும். வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இரவில் காத்திருக்கும் பக்தர்கள், காலையில் விரைவாக தரிசனம் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் திருப்பதியில் இருந்து தினமும் பக்தர்கள் திருமலைக்கு வந்து வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் திருமலையில் உள்ள அறைகள் வாங்கும் நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து