முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் 3-வது முறை: விசாரணையை நடத்திய 3 பெண் நீதிபதிகள் அமர்வு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் 3-வது முறையாக பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு முன் நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றது.

சுப்ரீம் கோர்ட்டில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு நேற்று வழக்குகளை விசாரித்தது.சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு வருவது இது மூன்றாவது முறையாகும். நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமைத்தார். திருமண தகராறு மற்றும் ஜாமீன் மனு உள்ளிட்ட 32 வழக்குகள் நேற்று இந்த நீதிபதிகள் அமர்வு முன் பட்டியலிடப்பட்டன.

இதற்கு முன், 2013 மற்றும் 2018ல், பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு இருந்தது. 2013ல் நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் பெஞ்சில் இருந்தனர்.2018 இல், நீதிபதிகள் ஆர். பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வில் உறுப்பினர்களாக இருந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் 34 நீதிபதிகள் தேவை. ஆனால் தற்போது 27 நீதிபதிகள் உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் தற்போது நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி, நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் உள்ளனர். அவர்களுள், 2027 இல், நீதிபதி பி.வி. நாகரத்னா 'நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி' என்ற பெருமையை அடைவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து